முன்கை பற்றி நடத்தி!
>> Thursday, September 23, 2010
ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
திரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!
புறநானூறு - 255
பாடியவர்: வன்பரணர்
திணை: பொதுவியல்
துறை: முதுபாலை
விளக்கம் : http://angumingum.wordpress.com/2008/04/14/words_puram/
***************************************
I am afraid to shout
I am afraid to shout for help
in this tiger infested place.
If I try to lift you by myself-
I can’t hold your broad chest in my arms.
O may unrighteous Death
who has approached you cruelly
feel embarrassed like me.
Dear one, just hold my wrist
and try to walk a little,
We shall try at least to reach
the shade of the hill beyond.
- Vanparanar
Purananuru – 255
Book : Love Stands Alone (Selections from Tamil Sangam Poetry)
Translated By : M.L.Thangappa - நேர்காணல்
Love Stands Alone - நூல் குறிப்புகள் :
http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/
http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099
1 comments:
மிக அருமையான பாடல் இது. படிக்கும் போதே அந்த பெண்ணின் ஆற்றாமை நம்மையும் பீடிக்கும்....
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த உணர்வு வராதது வருத்தமே. Love Stands Aloneல் தங்கப்பாவின் பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் கச்சிதமான வந்திருந்தன. பல கவிதைகள் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டதைப் போன்ற சரளத்துடன். ஆனால் இந்த கவிதையில் எனக்கு ஏமாற்றமே...
புறநானூறு கவிதைக்கு எனது தளத்தின் சுட்டியை தந்தமைக்கு நன்றி.
- சித்தார்த்.
Post a Comment